விமான நிலையம் வந்த 'பீஸ்ட்' பூஜா ஹெக்டேவுக்கு காத்திருந்த ஷாக்
விஜய்யின் பீஸ்ட் படத்தில் ஹீரோயினாக நடித்து இருந்தார் பூஜா ஹெக்டே. அவர் தமிழில் நடித்த முதல் படம் தோல்வி அடைந்த நிலையில் பல வருடங்கள் கழித்து பீஸ்ட் மூலமாக ரீ என்ட்ரி கொடுத்தார். ஆனால் இந்த படமும் மோசமான விமர்சனங்களை சந்தித்தது. சமீபத்தில் இந்த படம் ஓடிடியில் ரிலீஸ் ஆன நிலையில் கிளைமாக்ஸ் காட்சியில் விஜய் ஜெட் ஓட்டும் காட்சிகளை கலாய்த்து வருகின்றனர்.
இதெல்லாம் ஒருபுறம் இருக்க தற்போது பூஜா ஹெக்டே கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்க இருக்கிறார். அங்கு செல்வதற்காக அவர் மும்பை விமான நிலையம் வந்த போது அவருக்கு ஒரு பெரிய சர்ப்ரைஸ் காத்திருந்தது.
அவர் காரை விட்டு இறங்கியதும் அங்கு ரசிகர்கள் கூட்டமாக நின்று அவரை வாழ்த்தி பேனர் பிடித்துக் கொண்டிருக்கின்றனர். அதை பார்த்து அவருக்கு இன்ப அதிர்ச்சி தான்.
வீடியோ இதோ
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri