சூர்யா, விஜய்யை தொடர்ந்து 51 வயது நடிகருக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே..
பூஜா ஹெக்டே
நடிகை பூஜா ஹெக்டே பிசியான நடிகைகளில் ஒருவர். தொடர்ந்து பல முன்னணி ஹீரோக்களின் படங்களை கைவசம் வைத்துள்ளார்.
வருகிற மே 1 சூர்யாவுடன் இவர் இணைந்து நடித்துள்ள ரெட்ரோ திரைப்படம் வெளிவரவுள்ளது. இதற்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறது. இதை தொடர்ந்து தளபதி விஜய்யுடன் இணைந்து ஜனநாயகன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையில், பூஜா ஹெக்டேவின் புதிய படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.
51 வயது நடிகருக்கு ஜோடி?
அதன்படி, கன்னட சூப்பர்ஸ்டார் நடிகர் கிச்சா சுதீப்புடன் இணைந்து நடிக்கவிருக்கிறாராம் பூஜா. அனுப் பந்தரி இயக்கத்தில் கிச்சா சுதீப் நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் பில்லா ரங்கா பாட்ஷா.
இப்படத்தில் பூஜா ஹெக்டேவை ஹீரோயினாக நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல் கூறுகின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எப்போது வெளிவருகிறது என்று.