நயன்தாராவிற்கு இணையாக சம்பளத்தை ஏற்றி வரும் முன்னணி நடிகை - எத்தனை கோடி தெரியுமா

salary nayanthara pooja hegde
By Kathick Aug 14, 2021 09:00 AM GMT
Report

நடிகைகள் படத்துக்கு படம் சம்பளத்தை உயர்த்துகிறார்கள். நயன்தாரா தற்போது வாங்கி வரும் சம்பளம் ரூ.4 கோடியை தாண்டி உள்ளதாக கூறுகின்றனர்.

அதே போல் தென்னிந்திய அளவில் முன்னணி நடிகையாக இருக்கும் பூஜா ஹெக்டேவும் சம்பளத்தை திடீரென உயர்த்தி உள்ளாராம்.

இவர் இதுவரை, ஒரு படத்துக்கு ரூ. 2 முதல் ரூ. 3 கோடி வரை சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது. தற்போது விஜய் ஜோடியாக இவர் நடித்து வரும் பீஸ்ட் படத்திலும், இதை தான் சம்பளமாக வாங்கியுள்ளாராம்.

இந்நிலையில், அடுத்ததாக தெலுங்கில் மகேஷ் பாபுவுடன் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ள படத்தில், ரூ.3.5 கோடி சம்பளம் பேசி இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால், நடிகை நயன்தாராவிற்கு இணையாக தென்னிந்திய அளவில், தனது சம்பளத்தை ஏற்றி வருகிறார் நடிகை பூஜா ஹெக்டே எனும் பேச்சு, நிலவி வருகிறது.

பூஜா ஹெக்டே ஏற்கனவே சிரஞ்சீவியின் ஆச்சார்யா, பிரபாசின் ராதே ஷியாம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் இரண்டு இந்தி படங்களை கைவசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US