நடிகையின் தலைமையில் நடைபெற்ற விழா.. புதிய டிரெண்ட்டை உருவாக்கிய நடிகை பூஜா ஹெக்டே
பொதுவாக திரைப்பட விளம்பர நிகழ்ச்சிகளில் முன்னணி நடிகர்களை சிறப்பு விருந்தினராக அழைத்து தான் நடத்துவார்கள்.
இதுதான் திரையுலகில் வழக்கமாகவும் கொண்டுள்ளார்கள். ஆனால், இதனை தவிர்க்கும் விதத்தில் முதல் முயற்சி நடந்துள்ளது.
முதன்முறையாக தெலுங்கில் தயாராகியுள்ள வருடு காவலேனு என்ற படத்தின் இசை வெளியிட்டு விழாவை பூஜா ஹெக்டேவை சிறப்பு விருந்தினராக அழைத்து அவர் தலைமையில் நடத்துகிறார்கள்.
தெலுங்கு சினிமாவில் ஒரு கதாநாயகியை முதன்மைப்படுத்தி இப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி தான் முதன்முதலாக நடைபெறுகிறதாம்.
இதன்மூலம் டோலிவுட்டில் ஒரு புதிய டிரெண்ட்டை பூஜா ஹெக்டே உருவாக்கியிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
நடிகை பூஜா ஹெக்டே தற்போது தமிழில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.