படுதோல்வியடைந்த பீஸ்ட்.. மீண்டும் தமிழ் சினிமா பக்கம் வருவாரா பூஜா ஹெக்டே, லேட்டஸ்ட் தகவல்
பூஜா ஹெக்டே
முகமுடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார் நடிகை பூஜா ஹெக்டே.
இப்படத்தின் தோல்விக்கு பின் தமிழ் சினிமா பக்கம் தலைகாட்டாத பூஜா, பின் பல ஆண்டுகள் கழித்து பீஸ்ட் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். ஆனால், இப்படமும் அவருக்கு கைகொடுக்கவில்லை.
வசூல் ரீதியாக இப்படம் வெற்றி என கூறப்பட்டாலும், விமர்சன ரீதியாக பீஸ்ட் படுதோல்வி என கோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
பீஸ்ட் படத்திற்கு பின் பூஜா ஹெக்டே மீண்டும் தமிழில் நடிப்பாரா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், அதற்க்கான பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம்.
லேட்டஸ்ட் தகவல்
லிங்குசாமி இயக்கவிருக்கும் பையா 2 படத்தில் கதாநாயகியாக நடிக்க வைக்க பூஜா ஹெக்டேவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும், கண்டிப்பாக அவர் நடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது என்றும் தெரிவிக்கின்றனர்.
பையா 2 படத்தில் ஆர்யா கதாநாயகனாக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. விரைவில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கின்றனர்.
நயன்தாரா ஆடவிருக்கும் கிரிக்கெட்.. இணையவிருக்கும் சூப்பர் கூட்டணி

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
