44 வயசாச்சி, இனி சித்தி ரோல் தான் பண்ணனும்: நடிகை பூஜா இப்படி சொல்லிட்டாரே
ஜேஜே, உள்ளம் கேட்குமே, நான் கடவுள் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் பூஜா உமாசங்கர். இலங்கையை சேர்ந்த நடிகையான அவர் தற்போது இலங்கை தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார்.
அவர் கடையிசியாக விடியும் முன் என்ற படத்தில் தான் மெயின் ரோலில் நடித்துஇருந்தார் . அதன் பிறகு குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டார். தற்போது அவருக்கு ஒரு மகளும் இருக்கிறார்.

இந்நிலையில் தற்போது ரசிகர் ஒருவர் ட்விட்டரில் பூஜாவின் போட்டோக்களை பதிவிட்டு "once up on a time there lived a ghost" என விக்ரம் பட பாடல் வரியை குறிப்பிட்டு இருந்தார்.
அவர் விரைவில் கம்பேக் கொடுக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் கேட்டனர். அதற்கு பதில் சொன்ன பூஜா, "அய்யோ.. இப்போ வயசாச்சு.. 44 வயசு ஆயிடுச்சு, கம்பேக் என்றால் சித்தி ரோல் தான் பண்ணனும்" என பூஜா ட்விட்டி இருக்கிறார்.
Aiyoooo. ??????. Too old now da. 44 years aiyidachi. Comebackna, Chitthi role than pannanum. ??????
— Pooja Umashankar (@PoojaUmashankar) July 1, 2022
18 வயதுக்கு மேற்பட்டோர் சேர்ந்து வாழலாம்; லிவ்-இன் உறவுக்குத் தடையில்லை - உயர்நீதிமன்றம் IBC Tamilnadu