பூக்கி - மை லார்ட் படங்களின் வசூல்.. பாக்ஸ் ஆபீஸ் ரிப்போர்ட்
கடந்த 13ஆம் தேதி தமிழ் சினிமாவில் இருந்து வெளிவந்த திரைப்படங்கள் பூக்கி மற்றும் மை லார்ட். இந்த இரண்டு திரைப்படங்கள் இரண்டு நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
பூக்கி
விஜய் ஆண்டனி தயாரித்து, இசையமைத்து அஜய், தனுஷா இணைந்து நடித்து வெளிவந்த படம் பூக்கி. காதல் கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துவருகிறது.

இந்நிலையில், பூக்கி திரைப்படம் வெளிவந்து இரண்டு நாட்கள் ஆகும் நிலையில், இதுவரை உலகளவில் ரூ. 65+ லட்சம் வசூல் செய்துள்ளது.
மை லார்ட்
இயக்குநர் ராஜூ முருகன் இயக்கத்தில் சசிகுமார், சைத்ரா அச்சர் நடிப்பில் உருவாகி வெளிவந்த மை லார்ட் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படத்தின் மூலம் ராஜூ முருகன் பேசியுள்ள அரசியல் இந்த காலகட்டத்திற்கு மிக முக்கியமான ஒன்று என பலரும் கூறி வருகிறார்கள்.

விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வரும் மை லார்ட் படம், உலகளவில் இதுவரை ரூ. 1.2 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் பூக்கி மற்றும் மை லார்ட் ஆகிய இரண்டு படங்கள் எவ்வளவு வசூல் செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
திட்டமிட்டதே நான்தான்... கனடாவில் 400 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் புதிய தகவல் News Lankasri
ரூ.3,108 கோடி மதிப்பில் சென்னைக்கு குடிநீர் திட்டம் - முதல்வர் விஜய் அடிக்கல் நாட்டுகிறார் IBC Tamilnadu