7ம் வகுப்பு மாணவன் அனுப்பிய திருமண ப்ரோபோசல்! பூனம் பஜ்வா கடும் அதிர்ச்சி

By Parthiban.A Dec 12, 2022 06:19 PM GMT
Report

பூனம் பஜ்வா

நடிகை பூனம் பஜ்வா தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகி 15 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. அவர் தற்போது படங்களில் நடிப்பது குறைந்துவிட்டாலும் சமூக வலைத்தளங்களில் மிக மிக கவர்ச்சியாக போட்டோக்கள் வெளியிட்டு ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

பூனம் பஜ்வா தான் ஒரு பிரபல இயக்குனரை காதலித்து வருவதாகவும் சில வருடங்களுக்கு முன்பு அறிவித்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

7ம் வகுப்பு மாணவன் அனுப்பிய திருமண ப்ரோபோசல்! பூனம் பஜ்வா கடும் அதிர்ச்சி | Poonam Bajwa Shocked On Proposal 7Th Student

ப்ரோபோஸ் செய்த 7ம் வகுப்பு பையன்

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் 7ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் தனக்கு திருமண ப்ரோபோசல் அனுப்பி இருந்ததாக பூனம் பஜ்வா கூறி இருக்கிறார்.

"உங்களை எனக்கு பிடித்து இருக்கிறது. திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன். எனக்கு வயது குறைவாக இருக்கிறது. எனக்கு 21 வயதாகும் வரை காத்திருங்க. வயது வித்தியாசம் பிரச்சனை இல்லை. இப்போ ட்ரெண்ட் மாறிவிட்டது. எனது அம்மாவையும் convince செய்துவிட்டேன். நீங்க கிளாமராக தொடர்ந்து நடிக்கலாம்" என அந்த மெசேஜில் அவன் குறிப்பிட்டு இருந்ததாக பூனம் பஜ்வா பேட்டியில் கூறி இருக்கிறார்.

அந்த மெசேஜுக்கு என்ன பதில் அளிப்பது என்று கூட எனக்கு தெரியவில்லை, அதனால் ரிப்ளை செய்யாமல் விட்டுவிட்டதாக அவர் கூறி இருக்கிறார். 


GalleryGalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US