பிரபல ஹிந்தி நடிகை பூனம் மரணம்!! பேரதிர்ச்சியில் ரசிகர்கள்
பூனம் பாண்டே
இந்தியில் 2013-ம் ஆண்டு வெளியான நாஷா என்ற திரைப்படத்தில் படுகவர்ச்சியாக நடித்து பதற வைத்தவர் பூனம் பாண்டே.
கடந்த 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை இந்தியா வென்றால், ஆடையில்லாமல் மைதானத்தில் ஓடுவேன் என்று சொல்லி பெரும் பரபரப்பு கிளப்பினார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்தது குறிப்பிடத்தக்கது.
சினிமாவில் கொஞ்சம் விலகி இருந்த பூனம் பாண்டே, அடிக்கடி படு கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிட்டு வந்து இருந்தார்.

மரணம்!!
இந்த நிலையில் இன்று காலை பூனம் பாண்டே கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கின்றனர்.
அந்த பதிவில் “இன்று காலை எங்களுக்கு கடினமாக உள்ளது. கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் எங்கள் அன்புக்குரிய பூனத்தை இழந்துவிட்டோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று பதிவிட்டு இருக்கின்றனர்.