விஜய் டிவியின் புதிய சீரியல் பூங்காற்று திரும்புமா எப்போது இருந்து ஆரம்பம்.. புரொமோவுடன் வந்த விவரம்
விஜய் டிவி
விஜய் தொலைக்காட்சியில் விதவிதமான கதைக்களத்துடன் சீரியல்கள் நிறைய ஒளிபரப்பாகி வருகிறது.
சிறகடிக்க ஆசை, மகாநதி, பாண்டியன் ஸ்டோர்ஸ், அய்யனார் துணை, பாக்கியலட்சுமி இப்படி எந்த தொடர் எடுத்தாலும் வெவ்வேறு கதைக்களத்தை கொண்டது தான்.
விரைவில் விஜய்யில் ஒளிபரப்பாகும் நீ நான் காதல் கிளைமேக்ஸ் எபிசோட் வர உள்ளது, இது முடிவதற்குள் புதிய தொடரின் புரொமோவை களமிறக்கிவிட்டனர்.
பூங்காற்று திரும்புமா
முத்தழகு சீரியல் புகழ் ஷோபனா நாயகியாக நடிக்க பூங்காற்று திரும்புமா என்ற தொடர் ஒளிபரப்பாக உள்ளது.
சந்தேகப்படும் கணவன், அப்பாவை தவிர தனக்கு சப்போர்ட் செய்யாத அம்மா வீடு என வாழும் ஒரு பெண்ணின் கதையாக இந்த தொடர் இருக்கும் என புரொமோக்கள் மூலம் தெரிகிறது.
தற்போது என்ன தகவல் என்றால் வரும் ஏப்ரல் 28ம் தேதி முதல் இந்த தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாம். புரொமோவுடன் இந்த தகவல் வந்துள்ளது.

சகோதரி மகள்களைக் காப்பாற்ற அருவிக்குள் குதித்த இலங்கைத் தமிழருக்கு நேர்ந்த துயரம்: சமீபத்திய தகவல் News Lankasri
