சினிமாவிற்கு வந்த புதிதில் நான் செய்த தவறுகள்.. நடிகை பூர்ணா பேட்டி
பரத் நடிப்பில் வெளிவந்த முயாண்டி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பூர்ணா.
இதன்பின் தமிழில் வெளியான துரோகி, ஆடு புலி, கொடிவீரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் மட்டுமின்றி மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் பிசியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தனது திரை வாழ்க்கையின் அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
இதில் " சினிமா துறைக்கு தனியாக வந்து இத்தனை ஆண்டுகளாக நீடிக்கிறேன். சினிமா கேரியர் நீண்ட காலம் நீடிக்க வேண்டுமென்றால் நல்ல கதைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
சினிமாவிற்கு வந்த புதிதில் நான் சில தவறுகள் செய்தேன். ஆனால் இப்போது ஜாக்கிரதையாக நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்கிறேன் " என கூறியுள்ளார்.