திருமணமாகி இரண்டே மாதத்தில் கர்ப்பத்தை அறிவித்த நடிகை பூர்ணா
பூர்ணா
முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படத்தின் மூலமாக தமிழில் ஹீரோயினாக அறிமுகம் ஆனவர் பூர்ணா. கேரளாவை சேர்ந்த அவர் மலையாளம் மற்றும் தெலுங்கு சினிமாவிலும் அதிக படங்கள் நடித்து இருக்கிறார்.
சமீப காலமாக குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த அவர் கடந்த அக்டோபர் மாதம் 25ம் தேதி துபாயை சேர்ந்த தொழிலதிபர் Shanid Asif Ali என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
கர்ப்பம்
திருமணத்திற்கு சில மாதங்களுக்கு முன்பு அவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்து இருந்தது. ஆனால் அவர் கணவருடன் திருமண போட்டோக்கள் வெளியிட்டபின் தான் அவருக்கு திருமணம் நடந்து முடிந்தது எல்லோருக்கும் தெரியவந்தது.
இந்நிலையில் தற்போது திருமணமாகி இரண்டு மாதங்களில் பூர்ணா தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்து இருக்கிறார். அதை வீடியோவாக அவர் வெளியிட்டு இருக்கிறார். ரசிகர்கள் தற்போது அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். வீடியோ இதோ..

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
