தனுஷ் எந்த எல்லைக்கும் செல்வார்!! படுக்கையறை காட்சி குறித்தும் பேசிய பிக் பாஸ் பூர்ணிமா..
பூர்ணிமா
Youtube வீடியோக்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பூர்ணிமா. பிக் பாஸ் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்த இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதன்பின் செவப்பி எனும் படத்தில் கதாநாயகியாக நடித்தார்.
இதுமட்டுமின்றி நயன்தாராவின் அன்னபூரணி திரைப்படத்தில் அவருடைய தோழியாக நடித்திருந்தார். மேலும் தற்போது நல்ல பெயரை வாங்க வேண்டும் பிள்ளைகளே எனும் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட நடிகை பூர்ணிமா ரவி, படுக்கையறை காட்சி குறித்தும், நடிகர் தனுஷ் பற்றியும் பேசினார்.
படுக்கையறை காட்சி - தனுஷ்
அவர் பேசியது "படுக்கையறை காட்சி என்று இல்லை, எந்த காட்சியாக இருந்தாலும் அது கதையுடன் ஒத்துப்போக வேண்டும். அப்படியில்லாமல் திணிக்கப்பட்ட கூடாது. முக்கியமாக ரொமான்ஸ் மற்றும் படுக்கையறை காட்சிகளில் நடிப்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம்" என படுக்கையறை காட்சி குறித்த தனது கருத்தை கூறினார்.
இதன்பின் "தனுஷ் தான் எனக்கு மிகவும் பிடித்த நடிகர். எந்த வித கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரத்துக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்டு எந்த எல்லைக்கும் அவர் செல்வார்" என கூறினார்.
You May Like This Video

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan

பிரித்தானியாவின் பாரிய இஸ்லாமிய கல்லறையை கட்டும் கோடீஸ்வர சகோதரர்கள்! எதிர்ப்பால் பின்னடைவு News Lankasri
