பூவே பூச்சூடவா சீரியல் நடிகை ரேஷ்மா நடிக்கப்போகும் புதிய சீரியல்- எந்த தொலைக்காட்சியில் தெரியுமா?
கடந்த சில வருடங்களில் தமிழ் சினிமாவில் நிறைய சீரியல் நடிகர்கள் அறிமுகமாகிவிட்டார்கள்.
இப்போது ஒளிபரப்பாகும் அனைத்து சீரியல்களிலும் முக்கிய நடிகர்களாக புதுமுகங்கள் தான் நடிக்கிறார்கள். அவர்களுக்கும் தமிழ் சினிமா ரசிகர்கள் ஆதரவு அளித்து வருகிறார்கள்.
அப்படி ஜீ தமிழில் புதுமுக நடிகர்கள் நிறைய பேர் நடிக்க தொடங்கப்பட்ட ஒரு சீரியல் பூவே பூச்சூடவா. இதில் முக்கிய நாயகன் மாற்றம் நடந்தும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த சீரியலின் நாயகியாக நடித்து வருபவர் நடிகை ரேஷ்மா.
இவர் அந்த சீரியலிலேயே நடிக்கும் மதன் என்பவரை காதலிக்கிறார், இந்த தகவலை அவர்கள் இருவரும் ஜனவரி 1, 2021 தான் அறிவித்தார்கள்.
தற்போது ரேஷ்மா குறித்து ஒரு தகவல் வந்துள்ளது. பூவே பூச்சூடவா சீரியல் முடிவுக்கு வரப்போகிறதா என்று தெரியவில்லை, ஆனால் ரேஷ்மா புதிய சீரியல் ஒன்றில் கமிட்டாகியுள்ளாராம்.
அந்த சீரியல் கலர்ஸ் தமிழில் தான் ஒளிபரப்பாக உள்ளதாம். மற்றபடி புதிய சீரியல் குறித்து வேறுஎந்த தகவலும் வெளியாகவில்லை.