பூவே உனக்காக பட புகழ் நடிகை அஞ்சு அரவிந்தை நியாபகம் இருக்கா?- அவருக்கு இவ்வளவு பெரிய மகளா, போட்டோ இதோ
பூவே உனக்காக
விஜய் திரைப்பயணத்தில் ரசிகர்கள் கொண்டாடிய படங்கள் அதிகம் உள்ளது, அப்படி ஒரு படம் தான் பூவே உனக்காக.
விக்ரமன் இயக்கத்தில் நடிகர் விஜய், நடிகை சங்கீதா, நடிகை அஞ்சு அரவிந்த், நம்பியார், நாகேஷ், மலேசியா வாசுதேவன் என நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர்.
1996ம் ஆண்டு வெளியான இந்த படம் விஜய்க்கு மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை கொடுத்தது. இந்த படத்தில் விஜய் உருகி உருகி காதலிக்கும் பெண்ணாக அஞ்சு அரவிந்த் நடித்திருப்பார்.
நடிகையின் மகள்
நடிகை அஞ்சு அரவிந்த் தமிழை தாண்டி தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்துள்ளார். திருமணத்திற்கு பின் படங்களில் நடிப்பதை நிறுத்திய அஞ்சு அரவிந்த் தனது குடும்பத்துடன் நேரம் செலவழித்து வருகிறார்.
இந்த நிலையில் நடிகை அஞ்சு அரவிந்த் தனது மகளுடன் ஒரே மாதிரியான உடை அணிந்து வெளியிட்டுள்ள போட்டோ இப்போது வைரலாகி வருகிறது. அட இவருக்கு இவ்வளவு பெரிய மகளா என ரசிகர்கள் புகைப்படத்திற்கு அதிக லைக்ஸ் குவித்து வருகின்றனர்.