பூவே உனக்காக சீரியலில் இருந்து திடீரென வெளியேறிய பிரபல நடிகர்- ரசிகர்கள் ஷாக்
சன் தொலைக்காட்சியில் நிறைய ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பாகின்றன. அதில் ஒன்று தான் பூவே உனக்காக, இளம் நடிகர்கள் நடிக்க ஹிட்டாக தான் சீரியல் ஓடிக் கொண்டிருக்கிறது.
தற்போது இந்த சீரியலில் இருந்து விலகுவதாக நடிகர் ஒருவர் பதிவு போட்டுள்ளார். அவர் வேறுயாரும் இல்லை நடிகர் கதிர் தான் சீரியலை விட்டு வெளியேறுகிறாராம்.
கதிர் என்கிற அருண், ரசிகர்களே நான் உங்களுக்கு ஒரு செய்தி கூறப்போகிறேன். பூவே உனக்காக சீரியலில் இனிமேல் என்னை கதிராக உங்களால் பார்க்க முடியாது, சீரியலில் இருந்து விலகுகிறேன்.
இந்த அளவிற்கு எனக்கு ஆதரவு கொடுத்த உங்களுக்கு நன்றி, நீங்கள் இல்லாமல் நான் இந்த இடத்தை பிடித்திருக்க முடியாது. ஆனால் விரைவில் நான் உங்களுக்கு சந்தோஷ செய்தியை கூறுவேன் என பதிவு செய்துள்ளார்.
சிலர் சரியான முடிவு என்று கூறி வந்தாலும் சீரியலை விட்டு விலகாமல் இருந்திருக்கலாம் என்றும் கமெண்ட் செய்கிறார்கள்.