ரஜினி ஒரு பக்கா பிஸ்னஸ்மேன், அப்படி பண்ணிட்டாரு.. பிரபல சீரியல் நடிகர் சொன்ன விஷயம்
நடிகர் ரஜினிகாந்த் 73 வயதிலும் பிஸியாக படங்கள் நடித்து வருகிறார். அடுத்து அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் ரஜினி செய்த ஒரு விஷயம் பற்றி பிரபல சீரியல் நடிகர் பூவிலங்கு மோகன் ஒரு பேட்டியில் பேசி இருக்கிறார்.

ரஜினி ஒரு பக்கா பிஸ்னஸ்மேன்
ரஜினி கதை எழுதி தயாரித்து இருந்த படம் பாபா. அதில் பூவிலங்கு மோகன் ரஜினி உடன் நடித்த அனுபவம் பற்றி பேசி இருக்கிறார்.
"பாபா ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினி என்னிடம் பேசும்போது சீரியல் ஷூட்டிங் எப்படி போகிறது, எவ்வளவு சம்பளம் தருகிறார்கள், எவ்வளவு நேரம் ஷூட்டிங் என கேட்டார். காலை 9 - இரவு 9 வரை ஷூட்டிங், 3000 ரூபாய் சம்பளம் கொடுப்பார்கள் என நான் கூறினேன்."
"அவர் அவ்வளவு ஆர்வமாக கேட்டது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. அதன் பின் இரண்டு மாதங்கள் கழித்து நான் பாபா படத்தில் நடித்ததற்கு சம்பள செக் வந்தது. அதில் ஒரு நாள் சம்பளம் 3000 என கணக்கிடப்பட்டு இருந்தது."
"ரஜினி ஒரு பக்கா பிஸ்னஸ்மேன் என்பது எனக்கு அப்போது தான் தெரிந்தது" என மோகன் கூறி இருக்கிறார்.

எனக்காக எல்லாவற்றையையும் விட்டுக்கொடுத்த ரசிகர்களுக்காக.. - மலேசியாவில் விஜய் உருக்கம் IBC Tamilnadu
அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்த உடன்.. - 5 தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்த எடப்பாடி பழனிசாமி IBC Tamilnadu