ரோபோ ஷங்கர் உடல்நிலை மோசமானதற்கு காரணமே அந்த விஷயம் தான்... பிரபல நடிகர்
ரோபோ ஷங்கர்
அன்றாடம் ஓய்வே இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் மக்கள் சிரிப்பு என்பதை மறந்துவிட்டார்கள் என்றே கூறலாம்.
அப்படி பிஸியாக இருக்கும் மக்களை தனது காமெடி உணர்வு மூலம் சிரிக்க வைத்தவர் தான் ரோபோ ஷங்கர்.
விஜய் தொலைக்காட்சியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் தனது பயணத்தை தொடங்கியவர் தமிழ் சினிமா கொண்டாடும் பிரபல காமெடியனாக வலம் வந்தார்.
பிஸியாக நடித்துக் கொண்டிருந்தவர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு சினிமாவில் இருந்து விலகியிருந்தார். சில மாதங்களுக்கு முன்பு தான் மீண்டும் நடிக்க தொடங்கினார், ஆனால் அதற்குள் உடல்நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார்.
காரணம்
இளம் வயதிலேயே அவரது உடல் பாதிப்பதற்கு காரணமே அந்த விஷயம் தான் என நடிகர் இளவரசு கூறியுள்ளார். அதில் அவர், ஆரம்ப காலத்தில் உடலில் சில்வர் பெயிண்ட் பூசிக்கொண்டு நடன மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
உடலில் உள்ள அந்த பெயிண்ட்டை அகற்றுவதற்கு மண்ணெண்ணென் ஊற்றி அதனை துடைத்திருக்கிறார்கள். தொடர்ச்சியாக பெயிண்ட் மற்றும் மண்ணெண்ணென் பட்டதன் காரணமாக அவரது தோள் வலுவிழந்துள்ளது.
இதில் ஏற்பட்ட குறைபாடுகளால் தான் அவருக்கு மஞ்சள் காமாலை ஏற்பட்டிருக்கிறது. இளம் வயதிலேயே அவரது உடல் பாதிப்பதற்கு இதுதான் காரணம் என நடிகர் இளவரசு கூறியுள்ளார்.

ஜனாதிபதி ட்ரம்ப் நாட்டை விட்டு வெளியேறியதும்... பிரித்தானியா எடுக்கவிருக்கும் அதி முக்கிய முடிவு News Lankasri
