விஜய் முதலில் அவரது பெற்றோருடன் பேசட்டும், பிறகு அதை பார்ப்போம்- பிரபல நடிகர்
நடிகர் விஜய்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக கோடான கோடி ரசிகர்களுக்கு ஒரு முன் உதாரணமாக இருப்பவர் தான் விஜய். இவரது படங்கள் வந்தால் திரையரங்கு பக்கம் அதுவரை வராதவர் கூட வந்துவிடுவார்.
அந்த அளவிற்கு விஜய் சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கவர்ந்துள்ளார். கடந்த ஜனவரி 11ம் தேதி வெளியான வாரிசு படத்திற்கு விஜய் ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்துள்ளார்கள்.
விஜய் பற்றி பிரபல நடிகர்
விஜய் சினிமாவில் இருக்கும் அனைவருடனும் மிகவும் நப்போடு பழகக் கூடியவர். ஆனால் நடிகர் நெப்போலியன் மற்றும் விஜய்க்கு அப்படி இல்லை, இருவரும் 15 வருடத்திற்கு முன்பு ஏற்பட்ட பிரச்சனையால் இன்னும் பேசாமல் இருக்கிறார்கள்.
அண்மையில் ஒரு பேட்டியில் விஜய் குறித்து பேசிய நெப்போலியன், 15 வருடத்திற்கு முன் விஜய்யுடன் சில பிரச்சனை, அதனால் அப்போதில் இருந்து அவரது படத்தை பார்ப்பது இல்லை. இப்போது நான் அவருடன் பேச தயார், ஆனால் அவர் தயாரா அதை நீங்கள் தான் கேட்க வேண்டும்.
முதலில் அவர் அவரது அப்பா-அம்மாவுடன் பேசட்டும், பிறகு பார்க்கலாம் என பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களின் சொந்த ஊர் எது தெரியுமா?- இதோ லிஸ்ட்