சினிமாவில் ரூ. 200 கோடி வாங்கும் ஒரு நடிகர், விஜய் அரசியலுக்கு வருவது?- பிரபல நடிகரின் ஓபன் டாக்
நடிகர் விஜய்
தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர்கள் இவரது படத்தை தயாரிக்க மாட்டோமா, விநியோகஸ்தர்கள் சண்டை போட்டு இவரது படத்தை வாங்கும் வேண்டும் என நினைப்பது எல்லாம் விஜய்யின் படத்திற்காக தான்.
இவர் படம் என்றாலே தமிழ்நாடே திருவிழா கோலமாக தான் இருக்கும். தமிழ்நாட்டை தாண்டி கேரளா, கர்நாடகா, ஆந்திரா என எல்லா இடத்திலும் இவரது படங்கள் செம வசூல் வேட்டை செய்யும்.
இப்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68வது படமான கோட் படத்தின் படப்பிடிப்பு வேலைகளில் பிஸியாக இருக்கிறார்.
இப்படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு கேரளாவில் நடக்க இருக்கிறது. அதற்கான நேற்று விஜய் திருவனந்தபுரம் செல்ல அவரது வருகை கேள்விப்பட்டு ரசிகர்கள் கூட்டம் கூடியுள்ளது.
விஜய் கேரளாவில் என்ட்ரி கொடுத்த போது எடுக்கப்பட்ட வீடியோக்கள், புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகரின் பாராட்டு
இந்த நிலையில் விஜய்யின் அரசியல் என்ட்ரி குறித்து நடிகர் சமுத்திரக்கனி ஒரு பேட்டி கொடுத்துள்ளார்.
அதில் அவர், படத்திற்கு ரூ. 200 கோடி சம்பாதிக்கும் ஒரு மனுஷன் இனி நடிக்க மாட்டேன்னு சொல்ல தைரியம் வேணும். அவர் கிட்டயே நிறைய இருக்கும், அவர் அரசியலுக்கு வந்து திருட போறது இல்ல.
சினிமாவில் தோற்று போய் வரல, படம் இல்லாமல் வரல, மக்களுக்கு ஏதாவது செய்யலாம் என்று வருகிறார். அவருக்கு எனது சல்யூட் என பெருமையாக சமுத்திரக்கனி பேசியுள்ளார்.
