திருப்பதி வெங்கடாஜலபதியாக நடித்திருக்கும் பிரம்மாண்ட நாயகன்

movie venkatajalapathi
By Kathick Aug 26, 2021 08:37 AM GMT
Report

பிரம்மாண்ட நாயகன் திருப்பதி வெங்கடாஜலபதி மற்றும் பகவான் பாலாஜியின் புராண வரலாறு தமிழ் மற்றும் தெலுங்கிலும் திரைப்படமாக உருவாகி இருக்கிறது. சீனிவாசப்பெருமாள் எப்படி திருப்பதி வெங்கடாஜலபதி ஆனார் என்பதை விளக்கும் வகையில் திரைக்கதையை உருவாக்கி இருக்கிறார்கள். இந்தப் படத்தில் திருப்பதி வெங்கடாஜலபதி ஆகவும் மற்றும் ஸ்ரீனிவாசன் வேதவன் மகா விஷ்ணு ஆகிய வேடங்களில் ஆரியன் நடித்திருக்கிறார்.

இந்தப் படத்திற்காக முழுமையாக விரதம் இருந்து இந்த திருப்பதி பாலாஜி வேடத்தை ஏற்று நடித்திருக்கிறார். தெலுங்கில் அதிகமா கிருஷ்ணர் வேடத்தை ஏற்று நடித்து புகழ்பெற்றவர் என்.டி. ராமாராவ், அவருக்குப் பிறகு அந்த வேடத்தை முழுமையாக ஏற்று நடிக்கும் இளம் நடிகர் ஆர்யன் ஷாம். இதில் மகாலட்சுமியாக அதிதியும் ஸ்ரீ பத்மாவதி தேவியாக சந்தியா ஸ்ரீ நடித்திருக்கிறார்கள். இந்தப்படத்தின் ஒளிப்பதிவை எஸ். ஆனந்த்பாபு கவனித்திருக்கிறார்.

இசையை திவாகர் சுப்பிரமணியம் பக்தி ஊட்டும் வகையில் அமைத்திருக்கிறார். இந்தத்திரைப்படத்தை சீரடி சாய்பாபா ரமண மகரிஷி ராமகிருஷ்ண பரமஹம்சர் போதேந்திர போன்ற இந்தியாவின் தலைச்சிறந்த மகான் பற்றிபல நாடகங்களை நடத்திய கலைமாமணி திருமதி ஞானம் பாலசுப்பிரமணியம் (பம்பாய் ஞானம்) இயக்கியிருக்கிறார்.

விரைவில் வெளிவரவிருக்கும் ஏவிஎம் புரொடக்ஷன்ஸ் வழங்கும் அந்த நாள் திரைப்படத்தில் கதாநாயகனாக ஆர்யன் ஷாம் நடித்து வருகிறார். இவர் இந்தியன் வங்கியின் நிறுவனர் மறைந்த கிருஷ்ணசாமியின் கொள்ளுப் பேரன் ஆவார். அவர் சுவாமி விவேகானந்தரின் புகழ்பெற்ற சிகாகோ பயணத்திற்கு முழு நிதி உதவியின் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். அங்கு இந்து மதத்தை அமெரிக்காவில் அறிமுகப்படுத்தினார்.

திருப்பதி வெங்கடாஜலபதியாக நடித்திருக்கும் பிரம்மாண்ட நாயகன் | Popular Actor Acting Like God Venkatajalapathi

திருப்பதி வெங்கடாஜலபதியாக நடித்திருக்கும் பிரம்மாண்ட நாயகன் | Popular Actor Acting Like God Venkatajalapathi

திருப்பதி வெங்கடாஜலபதியாக நடித்திருக்கும் பிரம்மாண்ட நாயகன் | Popular Actor Acting Like God Venkatajalapathi


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US