தளபதி 69 படத்தில் இணையும் மாஸ் வில்லன் நடிகர்.. யார் தெரியுமா
தளபதி 69
தளபதி விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவரவிருக்கும் திரைப்படம் தளபதி 69. GOAT படத்தை தொடர்ந்து விஜய் நடிக்கவிருக்கும் இப்படத்தை ஹெச். வினோத் இயக்கவுள்ளார்.
விஜய் - ஹெச். வினோத் இருவரும் முதல் முறையாக இப்படத்திற்காக இணைகின்றனர். மேலும் இப்படத்தை கே.வி.என் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. சமீபத்தில் தான் இப்படத்திற்கான அறிவிப்பு வெளிவந்த நிலையில் அடுத்த மாதம் படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது. மேலும் அனிருத் தான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
கத்தி, பீஸ்ட், மாஸ்டர், லியோ படங்களை தொடர்ந்து ஐந்தாவது முறையாக விஜய்யுடன் கைகோர்த்துள்ளார் அனிருத். கண்டிப்பாக பாடல்களும், பின்னணி இசையும் மாஸாக இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.
இப்படத்தில் மமிதா பைஜூ, சமந்தா, சிம்ரன் ஆகியோர் நடிக்கிறார்கள் என சொல்லப்பட்டது. அதே போல் சமீபத்தில் வெளிவந்த தகவலில் பூஜா ஹெக்டே தான் கதாநாயகி என கூறினார்கள். அதே போல் படத்தின் வில்லன் குறித்தும் சமீபத்தில் தகவல் வெளிவந்தது. பாலிவுட் சினிமாவில் கலக்கிக்கொண்டிருக்கும் பாபி தியோல் தான் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார் என்கின்றனர். ஆனால், கதாநாயகி மற்றும் வில்லன் குறித்து படக்குழுவிடம் இருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவரவில்லை.
முக்கிய கதாபாத்திரத்தில் இவரா
இந்த நிலையில், லேட்டஸ்ட் அப்டேட் என்னவென்றால் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரகாஷ் ராஜ் நடிக்கப்போவதாக தகவல் பரவி வருகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. விஜய் - பிரகாஷ் ராஜ் கூட்டணியில் கில்லி, சிவகாசி, வில்லு, போக்கிரி, வாரிசு ஆகிய படங்கள் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu
