ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பி.வி.சிந்து.. பாராட்டு விழா நடத்திய முன்னணி நடிகர்
டோக்கியோவில் சமீபத்தில் நடந்து முடிந்த ஒலிம்பிக் போட்டிகளில் மகளிருக்கான பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெண்கலப் பதக்கம் வென்றார்.
இதன்மூலம் அடுத்தடுத்து இரு ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்களை பெறும் முதல் இந்திய பெண் வீராங்கனை என்கிற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
இந்நிலையில், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் சிரஞ்சீவி, பி.வி.சிந்துவுக்கு விருந்துடன் கூடிய பாராட்டு விழாவை நடத்தி இருக்கிறார்.
ஐதராபாத்தில் நடைபெற்ற இந்த விழாவிற்கு, தமிழ் நடிகைகள் ராதிகா சரத்குமார், சுகாசினி மணிரத்னம் ஆகியோர் கலந்துகொண்டு பி.வி.சிந்துவுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
ஒலிம்பிக்கில் அவர் வாங்கிய வெண்கலப் பதக்கத்தை கையில் வைத்துக்கொண்டு சிந்துவுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்கள்.
இதோ அந்த புகைப்படம்..
