அண்ணாத்த படத்தில் ரஜினிக்கு குரல் கொடுத்த பிரபல நடிகர்.. அட, இவரா..!
சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வரும் தீபாவளி அன்று வெளியாக இருக்கும் படம் அண்ணாத்த.
நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு என பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர்.
பல மொழிகளில் வெளியாகும் இந்த திரைப்படத்திம் கன்னட மொழி பதிப்பும் வெளியாகவிருக்கிறது.
இந்நிலையில் அண்ணாத்த திரைப்படத்தின் கன்னட மொழி பதிப்புக்கு ரஜினிகாந்த் கதாபாத்திரத்திற்கு நடிகர் சாய் குமார் குரல் கொடுத்திருக்கிறாராம்.
இதற்கு முன்பே நடிகர் சாய் குமார் ரஜினி நடித்த பாட்ஷா படத்தின் தெலுங்கு பதிப்பில் ரஜினிக்கு குரல் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் சாய் குமார் தமிழில் வெளியான ஆதி, இரும்பு கோட்டை முரட்டு சிங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
ஹார்முஸ் நீரிணையில் ட்ரம்ப் அறிவித்த 20 சதவீத கட்டணம்., உலக எண்ணெய் வர்த்தகத்தில் அதிரடி மாற்றம் News Lankasri
மீண்டும் முடிவை மாற்றிய ட்ரம்ப்... மத்திய கிழக்கு நாடுகள் ஒப்புக்கொண்டதாகவும் அறிவிப்பு News Lankasri