ஓடிடி படத்தில் நடிக்க ரூ.233 கோடி சம்பளம் வாங்கிய நடிகர்.. யார் அந்த பிரபலம் தெரியுமா
கொரோனா காலகட்டத்தில் திரையரங்குகள் மூடப்பட்டதால், ஓடிடி தளங்கள் அசுர வளர்ச்சி அடைந்தன.
இதன் காரணமாக, ஓடிடி தளங்களுக்காகவே பல படங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இதனால் ஓடிடி தளங்களுக்காக தயாராகும் படங்களில் நடிக்க முன்னணி நடிகர், நடிகைகளும் ஆர்வம் காட்டுகின்றனர்.
அந்த வகையில், பிரபல ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ, தற்போது ஓடிடி தளத்துக்காக தயாராகும் ‘Don't Look Up' படத்தில் நடிக்கிறார்.
இந்த படத்தில் நடிக்க அவருக்கு ரூ. 223 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதேபோல் இதில் ஹீரோயினாக நடிக்கும் ஜெனிபர் லாரன்சுக்கு ரூ.186 கோடி சம்பளம் கொடுத்துள்ளனர் என்று தெரிவிக்கின்றனர்.
ஆடம் மெக்கே இயக்கி உள்ள இப்படம் இந்தாண்டு டிசம்பர் மாதம் வெளியிடப்பட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.