விஜய் சேதுபதி, பகத் பாசிலை தொடர்ந்து 'விக்ரம்' படத்தில் இணைந்த மற்றொரு நடிகர் - இவர் முன்னணி நடிகரின் மகன் ஆச்சே
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விக்ரம்.
சமீபத்தில் கூட விக்ரம் படத்தின் First லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலானது.
First லுக் வெளியானதன் மூலம், இப்படத்தில் கமலுடன் இணைந்து விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் நடிப்பது உறுதிசெய்யப்பட்டது.
சென்ற வாரம் துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்பில் இருந்து, கமல் ஹாசன் விஜய் சேதுபதியின் புகைப்படங்கள் வெளியானது. மேலும் சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பில் பகத் பாசிலும் இணைந்துவிட்டார்.
இந்நிலையில் இப்படத்தில் கமல் ஹாசனின் மகன் கதாபாத்திரத்தில், பிரபல நடிகர் ஜெயராமின் மகன், காளிதாஸ் ஜெயராம் நடிக்கவிருக்கிறாராம்.
நடிகர் ஜெயராம், கமல் ஹாசனுடன் இணைந்து பஞ்சதந்திரம், தெனாலி, உத்தமவில்லன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரான் மீது குண்டுவீச்சு... பந்தயத்தில் 160,000 டொலர் சம்பாதித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி News Lankasri