சுந்தர்.சியின் அரண்மனை 4.. ஹீரோ யார் தெரியுமா
அரண்மனை
கடந்த 2014ம் ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில் வெளிவந்த படம் அரண்மனை. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து 2016ம் ஆண்டு அரண்மனை 2 திரைப்படம் வெளிவந்தது.
[TNSSBG ]
இதன்பின் கடந்த ஆண்டு அரண்மனை 3 படத்தை இயக்கினார் சுந்தர். சி. ஆனால், முதல் இரண்டு பாகத்திற்கு கிடைத்த வரவேற்பு மூன்றாவது பாகத்திற்கு கிடைக்கவில்லை.
அரண்மனை 4
இந்நிலையில், அரண்மனை படத்தின் 4வது படத்தை இயக்க சுந்தர்.சி முடிவு செய்துள்ளாராம். இதற்கான வேளைகளில் இயக்குனர் சுந்தர்.சி இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இப்படத்தில் ஹீரோவாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளாராம் சுந்தர்.சி.
விஜய் சேதுபதியும் இதற்க்கு ஓகே சொல்லியுள்ளதாக தெரிவிக்கின்றனர். விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சன் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள வாரிசு.. எப்போது தெரியுமா