சந்திரமுகி 2 படத்தில் இவர் நடிக்கிறாரா - ரசிகர்களுக்கு காத்திருக்கும் சப்ரைஸ்
ரஜினியின் சந்திரமுகி 2005ஆம் ஆண்டு திரைக்கு வந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
பி.வாசு இயக்கிய இந்த படத்தில் ரஜினியுடன் பிரபு, ஜோதிகா, நாசர், வடிவேலு, நயன்தாரா, உள்பட பலர் நடித்திருந்தனர்.
இதில் ரஜினியுடன் வடிவேலு இணைந்து நடித்த காமெடி காட்சிகள் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன.
விரைவில் இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் சந்திரமுகி படத்தின் 2ஆம் பாகம் உருவாகவுள்ளது. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் இரண்டாம் பாகத்திலும் வடிவேலு நடிக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது. முதல் பாகத்தை போல் இரண்டாம் பாகத்திலும் காமெடி முக்கிய பங்கு வகிக்கும் என கூறப்படுகிறது.
விரைவில் இதனை குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.