அஜித், விஜய்யுடன் மோத தயரான பிரபல முன்னணி நடிகர்.. மிகப்பெரிய எதிர்பார்ப்பில் பொங்கல் 2022

ajith vijay don sivakarthikeyan pongal 2022
By Kathick Sep 23, 2021 12:40 PM GMT
Report

எச். வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வலிமை. இப்படத்தின் Glimpse இன்று வெளியானது.

மேலும் வலிமை திரைப்படம் வரும் 2022 பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகும் என அறிவித்துவிட்டனர்.

அதே போல், தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்றுகொண்டிருக்கும் நிலையில், அணைத்து பணிகளும் முடிந்து, வருகிற 2022 பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இந்த போட்டியில் நடிகர் சிவகார்த்திகேயனும் இணைந்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, வரும் பொங்கல் 2022-க்கு சிவகார்த்திகேயனின் டான் திரைப்படமும் வெளியாகும் என்று இணையத்தில் தகவல் ஒன்று கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US