சங்கர் படத்தில் இணையும் மிரட்டலான நடிகர்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் சப்ரைஸ்
பிரமாண்ட இயக்குனர் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் சங்கர். இவர் அடுத்ததாக தெலுங்கு நடிகர் ராம்சரண் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார்.
தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் உருவாக உள்ளது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகும் இப்படத்தை தில் ராஜு தயாரிக்கிறார்.
தமன் இசையமைக்கும் இப்படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக நடிக்க பிரபல பாலிவுட் நடிகை கியாரா அத்வானி ஒப்பந்தமாகி உள்ளார்.
மேலும், இப்படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க, நடிகை தமன்னாவுடன் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக ஏற்கனவே ஒரு தகவல் வெளியாகியிருந்தது.
ஆனால் தற்போது, இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க பகத் பாசிலிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல் கூறுகின்றனர்.
பொறுத்திருந்து பார்ப்போம், படக்குழுவிடம் இருந்து வெளியாகவிருக்கும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பிற்காக.