அயன் படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது நான் தான்.. உண்மையை கூறிய பிரபல நடிகர்
அயன்
கே.வி. ஆனந்த் இயக்கத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு வெளிவந்த படம் அயன். சூர்யா ஹீரோவாக நடிக்க தமன்னா அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். ஜெகன், பிரபு, Akashdeep Saigal, கருணாஸ், பொன்வண்ணன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர்.

மாபெரும் அளவில் வெற்றிபெற்ற இப்படம் இன்று வரை சூர்யாவின் கேரியரில் முக்கியமான டாப் 10 திரைப்படங்களில் ஒன்றாக இருக்கிறது. இப்படத்தில் மிகமுக்கியமான சிட்டி பாபு ரோலில் ஜெகன் நடித்திருப்பார்.
உண்மையை கூறிய நடிகர்
சூர்யாவுடன் இணைந்து பயணிக்கும் இந்த கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது ஜெகன் கிடையாதாம். நடிகர் கிருஷ்ணா தான் இந்த ரோலில் முதன் முதலில் நடிப்பதாக இருந்தாராம்.
இயக்குனர் கே.வி. ஆனந்த் நடிகர் கிருஷ்ணாவிடம் இந்த ரோலில் நடிக்க கேட்டுள்ளார். ஆனால், அப்போது நடிகர் கிருஷ்ணா, 'நான் நடிப்பில் இருந்து விலகப்போகிறேன்' என கூறியுள்ளார். இதனால் இந்த ரோலில் நடிக்கும் வாய்ப்பும் கிருஷ்ணா கைவசம் இருந்து கைநழுவி போயுள்ளது.

இந்த தகவலை நடிகர் கிருஷ்ணா பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார். இவர் சண்டைக்கோழி, கவண், ஆரம்பம் ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க நடிகர் விநாயகன் வாங்கிய சம்பளம், எவ்வளவு தெரியுமா