மாநாடு படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம்.. இவர் சரியான வில்லன் ஆச்சே

simbu maanaadu venket prabhu sj suryah aravind saamy
By Kathick Nov 23, 2021 08:10 AM GMT
Report

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாநாடு. இப்படம் வருகிற 25ஆம் தேதி தமிழ், தெலுங்கு என இரு மொழிகளும் வெளியாகிறது.

இப்படத்தில் சிம்புவுடன் இணைந்து கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே. சூர்யா, எஸ்.ஏ. சந்தரசேகர், பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இப்படத்தில் பாடல்கள் மற்றும் டிரைலர் ரசிகர்களை கவர்ந்த நிலையில், மிகப்பெரிய எதிர்பார்ப்பு இப்படத்தின் மேல் ஏற்பட்டுள்ளது.

இப்படத்தில் தனுஷ்கோடி எனும் கதாபாத்திரத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளவர் நடிகர் எஸ்.ஜே. சூர்யா. இவருடைய வில்லத்தனமான நடிப்பை நாம் பல முறை திரையில் பார்த்திருக்கிறோம்.

இந்நிலையில் மாநாடு படத்தில் முதன் முதலில் இந்த தனுஷ்கோடி கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்தது எஸ்.ஜே. சூர்யா கிடையாதாம். நடிகர் அரவிந்த் சாமி தான், முதன் முதலில் இந்த கதாபாத்திரத்திற்கு தேர்வானாராம்.

அப்போது அரவிந்த் சாமியின் கால்ஷீட் கிடைக்காத காரணத்தினால், அதன்பின் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க எஸ்.ஜே. சூர்யா தேர்வாகியுள்ளதாக, இயக்குனர் வெங்கட் பிரபு பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US