மகான் படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்த பிரபல நடிகர்.. யார் தெரியுமா
கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இணைந்து நடித்து வெளிவந்துள்ள திரைப்படம் மகான்.
நேரடியாக அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளிவந்த இப்படம், தற்போது வரை நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
ஓடிடி-யில் இப்படத்தை பார்த்த திரை பிரபலங்கள் பலரும், படத்தில் நடித்த ஒவ்வொருவரையும் பாராட்டி வருகிறார்கள்.
இப்படத்தில் சத்தியவான் எனும் கதாபாத்திரத்தில் நடித்து பல பாராட்டுகளை பெற்று வருகிறார் நடிகர் பாபி சிம்ஹா.
இந்நிலையில், இவர் நடித்திருந்த இந்த கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரபல நடிகர் மோகன் தானாம்.
முதல் முதல் இந்த கதாபத்திரத்தில் மைக் மோகன் தான் நடிப்பதாக இருந்ததாம். பின், சில காரணங்களால் மைக் மோகன் இப்படத்தில் நடிக்க மறுத்து விட்டாராம்.