நண்பன் படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம்.. அட, இது தெரியாம போச்சே
நடிகர் விஜய்யின் மாறுபட்ட நடிப்பில் வெளிவந்த திரைப்படம் நண்பன். சங்கரின் இயக்கத்தில் முதல் முறையாக உருவான ரீமேக் படமும் இதுவாகும்.
இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து ஜீவா மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இவர்களுடைய எதார்த்தனமான நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றது.
இந்நிலையில் இப்படத்தில் ஸ்ரீகாந்த் நடித்திருந்த கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரபல நடிகர் நகுல் தானாம்.
அந்த கதாபாத்திரத்தில் நகுலை தான் முதலில் நடிக்க வைக்க வேண்டுமென இயக்குநர் ஷங்கரின் நினைத்தாராம்.
ஆனால், அப்போது சில காரணங்களால் நகுலால் நண்பன் படத்தில் நடிக்க முடியாமல் போனதாம். இதன்பின், இந்த கதாபாத்திரத்தில் நடிக்க, ஸ்ரீகாந்த் தேர்வு ஆனதாக தகவல் தெரிவிக்கின்றனர்.