அச்சம் என்பது மடமையடா படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது இவரா..! அப்போ சிம்பு
கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான படம் அச்சம் என்பது மடமையடா.
இப்படத்தில் சிம்புவுடன் இணைந்து மஞ்சிமா மோகன் முதல் முறையாக நடித்திருந்தார்.
விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் வெற்றிக்கு பின் கௌதம் மேனனுடன் இணைந்த சிம்பு, மீண்டும் ஒரு ஹிட் படத்தை கொடுத்தார்.
இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் வெற்றிபெற்றது.
இந்நிலையில் அச்சம் என்பது மடமையடா படத்தில் முதன் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது நடிகர் சிம்பு இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தில் சிம்வுக்கு முன், ஹீரோவாக நடிக்கவிருந்தது தளபதி விஜய் தானாம்.
சில காரணங்களால் இப்படத்தில் அவரால் நடிக்கமுடியாமல் போனது என்றும், அதன்பின் சிம்பு இப்படத்தில் நடிக்க கமிட்டானார் என்று கூறப்படுகிறது.
'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan