சமந்தா - நாகசைதன்யா விவாகரத்துக்கு இந்த நடிகர் தான் காரணமாம்..? பிரபல நடிகை சர்ச்சை பதிவு
நடிகை சமந்தா தென்னிந்திய முன்னணி கதாநாயகிகளில் ஒருவர். இவர் தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
நான்கு ஆண்டுகள் திருமண வாழ்க்கையில் தற்போது இருவரும் விவாகரத்து பெற்றுக்கொண்டு பிரியவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துவிட்டனர்.
இந்நிலையில் பிரபல நடிகை கங்கனா ரனாவத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதில் " கடந்த நான்கு ஆண்டுகளாக தனது மனைவியுடன் நெருக்கமாக வாழ்ந்து வந்த, அந்த தென்னிந்திய நடிகர் அவரது மனைவியை விவாகரத்து செய்ய இந்த பாலிவுட் நடிகர் தான் காரணம்.
இந்த நடிகரும் பாலிவுட்டில் விவாகரத்து நிபுணர் தான். அந்த பாலிவுட் நடிகருடன் நாகசைதன்யா தற்போது ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இருவரும் நெருக்கமானதை அடுத்து சமந்தா விவகாரம் குறித்து அவர் அறிவுரை கூறியதாலே நாக சைதன்யா தனது மனைவியை பிரிய முடிவு செய்தார் " என கங்கனா ரனாவத் குறிப்பிட்டுள்ளார்.
