உடல் எடை சுத்தமாக மெலிந்து நடிகர் ஜனகராஜ் இப்போது எப்படி உள்ளார் பாருங்க- வைரலாகும் போட்டோ
நடிகர் ஜனகராஜ்
தமிழ் சினிமாவில் 80, 90 காலகட்டத்தில் பிரபலமாக இருந்த நடிகர் ஜனகராஜ்.
இவர் ஒரு படத்தில் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா என்ற கூறிய வசனம் இப்போதும் பல கணவர்மார்கள் பயன்படுத்தி வருகிறார்கள், அந்த அளவிற்கு இந்த டயலாக் பேமஸ். 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நகைச்சுவை கேரக்டரிலும், குணச்சித்திர வேடத்திலும் நடித்து பிரபலமானவர்.
ஆரம்ப காலகட்டத்தில் கமல்ஹாசன், ரஜினி படங்களில் அதிகம் நடித்துள்ளார். பின் பல வருடங்களுக்கு பிறகு விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்த 96 படத்தில் பள்ளி பாதுகாவலராக நடித்திருப்பார்.
லேட்டஸ்ட் தகவல்
அந்த 96 படத்திற்கு பிறகு மீண்டும் ஜனகராஜை சினிமா பக்கம் காணவில்லை. இந்த நேரத்தில் தான் நடிகர் விஜய் சேதுபதி தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு புதிய படத்தின் ஃபஸ்ட் லுக் வெளியிட்டுள்ளார்.
அதுவேறு யாரு படமும் இல்லை, நடிகர் ஜனகராஜ் அவர்கள் தாத்தா என்ற குறும்படத்தில் நடித்திருக்கும் ஃபஸ்ட் லுக் போஸ்டர் தான் அது.
அதில் அவர் உடல்எடை சுத்தமாக குறைந்து காணப்படும் புகைப்படம் பார்த்து ரசிகர்கள் வருத்தம் அடைந்துள்ளனர், இன்னொரு பக்கம் படத்திற்கும் வாழ்த்து கூறி வருகின்றனர்.
இதோ விஜய் சேதுபதியின் டுவிட்,
Happy to unveil the poster of #Janakaraj in #Thatha short film, Good luck to the team. @Naresh_Dir_ @kavithareporter@cinemakaran_dop @aminarafiq5786 @Veerasamar @editorNash @vasukibhaskar @arun_capture1 @SRGhanashyam08 @RevathiA1301 @rishii_actor @TtptUnion pic.twitter.com/3oVFk9FY9Y
— VijaySethupathi (@VijaySethuOffl) February 15, 2024