ஷங்கருக்கு நோ! லோகேஷுக்கு ஓகே சொல்லிய பிரபல நடிகர்.. அதுவும் ரஜினியுடன் நடிக்க
கூலி
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கைவசம் தற்போது வேட்டையன் மற்றும் கூலி என இரு திரைப்படங்கள் உள்ளன. இதில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படம் தான் கூலி.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் தான் இப்படத்தின் டைட்டில் டீசர் வெளிவந்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
ரஜினியுடன் இணையும் பிரபல நடிகர்
இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கும் என கூறப்பட்டு வரும் நிலையில், லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி 38 ஆண்டுகளுக்கு பின் ரஜினியுடன் பிரபல நடிகர் ஒருவர் இணையவுள்ளாராம்.
அவர் வேறு யாருமில்லை நடிகர் சத்யராஜ் தான். ஆம், கூலி திரைப்படத்தில் ரஜினியின் நண்பராக நடிக்க கமிட் ஆகியுள்ளாராம் நடிகர் சத்யராஜ். இதன்மூலம் கிட்டதட்ட 38 ஆண்டுகளுக்கு பின் ரஜினியுடன் கூட்டணி அமைத்துள்ளார்.

விரைவில் இப்படத்தில் கமிட்டாகியுள்ள நட்சத்திரங்கள் குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் வெளியாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
கூலி திரைப்படத்திற்கு முன் ரஜினி - ஷங்கர் கூட்டணியில் வெளிவந்த சிவாஜி திரைப்படத்தில் வில்லனாக சத்யராஜை நடிக்க கேட்டுள்ளார் இயக்குனர் ஷங்கர். ஆனால், அப்போது ஷங்கர் படத்திற்கு நோ சொன்ன சத்யராஜ் தற்போது லோகேஷ் படத்திற்கு ஓகே கூறிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
You May Like This Video