வெறித்தனமாக உருவாகும் ஜெயிலர்.. படத்தில் இணைந்த வில்லன் நடிகர்
ஜெயிலர்
ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ஜெயிலர். இப்படத்தின் படப்பிடிப்பு நேற்றில் இருந்து துவங்கியது.
படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஜெயிலர் படத்தின் First லுக் போஸ்ட்டரை வெளியிட்டு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தனர்.
ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து கன்னட நடிகர் சிவராஜ் குமார், ரம்யா கிருஷ்ணன், தமன்னா ஆகியோர் நடிக்கிறார்கள்.
இணைந்த வில்லன் நடிகர்
இந்நிலையில், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் ஒரு இணைந்துள்ளார். ஆம், நடிகர் விநாயகன் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார் என தெரியவந்துள்ளது.
இவர் மலையாளத்தில் மிகவும் பிரபலமான நடிகர் ஆவார். அதுமட்டுமின்றி தமிழில் வெளிவந்த திமிரு படத்தில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எதிர்பாரா பேரழிவு; மெகா நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு - 3 லட்சம் பேர் உயிரிழக்கும் அபாயம் IBC Tamilnadu
