வாரிசு படத்திற்காக துணிவு பட வாய்ப்பை தவறவிட்ட பிரபல நடிகர்.. யார் தெரியுமா
துணிவு - வாரிசு
வருகிற 2023 பொங்கலுக்கு விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு இரு திரைப்படங்களும் ஒரே நாளில் வெளியாகிறது.
துணிவு படத்தை நள்ளிரவு 1AM மணிக்கும், வாரிசு படத்தை அதிகாலை 4AM மணிக்கும் திரையிட திட்டமிட்டுள்ளனர்.

மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த இரு திரைப்படங்களையும் திரையில் பார்க்க ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
வாய்ப்பு தவறவிட்ட நடிகர்
வாரிசு படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளவர் நடிகர் ஷாம். இவர் வாரிசு படத்தில் கமிட்டான சில நாட்களிலேயே துணிவு படத்தில் வில்லனாக நடிக்கும் வாய்ப்பையும் பெற்றுள்ளார்.

ஆனால், வாரிசு படத்திற்காக கமிட் செய்த அதே தேதியில் துணிவு படத்திற்கும் கால்ஷீட் கேட்டுள்ளார் இயக்குனர் எச். வினோத்.
இதனால், நடிகர் ஷாம் துணிவு படத்தில் நடிக்க முடியாமல் போனது என்று அண்மையில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
Bigg Boss 10: கையெடுத்து மன்னிப்பு கேட்ட அப்பா! 8 வருடத்திற்கு பின்பு ஒன்று சேர்ந்த லக்ஷ்மி ப்ரியா Manithan
உச்சநீதிமன்ற உத்தரவை மீறி.. திருப்பரங்குன்றம் உச்சிப்பிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்றிய தமிழக அரசு News Lankasri