தளபதி 68ல் இந்த முன்னணி நட்சத்திரம் நடிக்கவிருந்தாரா.. கடைசி நேரத்தில் ஏற்பட்ட மாற்றம்..
தளபதி 68
லியோ படத்தை தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68ல் நடிக்கவுள்ளார். ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
பெரிதும் எதிர்பார்ப்பில் உருவாகும் இப்படத்தின் பூஜை சமீபத்தில் போடப்பட்டது. அதன் வீடியோவை கூட தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு இருந்தனர். இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரஷாந்த், மோகன், ஜெயராம், பிரபு தேவா, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி என பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.
முதற்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்து நிலையில் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெறவுள்ளது. அதற்காக படக்குழுவினர் தற்போது தாய்லாந்திற்கு புறப்பட்டு சென்றுள்ளனர்.
வாய்ப்பை மிஸ் செய்த நடிகர்
இந்நிலையில், இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சந்தானம் நடிக்கவிருந்தாராம். ஆனால், கால்ஷீட் இல்லாத காரணத்தினால் சந்தானம் இப்படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டதாகவும், கடைசி நேரத்தில் அவருக்கு பதிலாக வேறொரு நடிகரை அந்த கதாபாத்திரத்திற்கு வெங்கட் பிரபு தேர்ந்தெடுத்ததாகவும் கூறப்படுகிறது.

Super Singer: தொகுப்பாளினி பிரியங்காவின் மானத்தை காப்பாற்றிய சிறுமி... பிரமிப்பில் நடுவர்கள் Manithan

சவால்விடும் சூழ்நிலைகளையும் கூலாக கையாளும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
