கே.ஜி.எப் 2 படத்துடன் நேருக்கு நேர் மோதவுள்ள முன்னணி நடிகரின் திரைப்படம்..
ஹிந்தியில் அத்வைத் சந்தன் இயக்கத்தில் நடிகர்கள் அமீர் கான், கரீனா கபூர், நாக சைதன்யா ஆகியோர் நடிப்பில் உருவாகிவரும் படம் தான் லால் சிங் சத்தா.
இந்த படம் கடந்த 1994-ம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளியாகி 6 ஆஸ்கார் விருதுகளை வென்ற Forrest Gump திரைப்படத்தின் ரீமேக் ஆகும்.
லால் சிங் சத்தாவில் கேமியோ ரோல்களில் நடிகர்கள் ஷாருக் கான், சல்மான் கான் ஆகியோரும் நடித்துள்ளார்கள்.
இந்த படம் வருகிற கிறிஸ்துமஸ் அன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் தற்போது அடுத்த ஆண்டு ஏப்ரல் 4-ந் தேதி வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருக்கிறது.
இது ஒரு புறம் இருக்க பிரஷாந்த் நீல் இயக்கி கன்னட நடிகர் யாஷ் நடித்து கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றது.
KGF Chapter 1-ன் இரண்டாம் பாகமான KGF Chapter 2வும் அடுத்த ஆண்டு ஏப்ரல் 4-ந் தேதி தான் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில் இந்த இரு பெரிய படங்களும் நேருக்கு நேர் திரையில் மோதப்போவது ரசிகர்களுக்கு சந்தோஷத்தை ஏற்படுத்தியிருக்கிறது.