தேவயானியின் 'புதுப்புது அர்த்தங்கள்' சீரியலில் இருந்து வெளியேறிய முக்கிய நபர்.. அவருக்கு பதிலாக நடிக்க வந்தது யார் தெரியுமா
வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை என இரு இடங்களிலும் தனக்கென தனி இடத்தை பிடித்திருப்பவர் நடிகை தேவயானி.
இவர் நடிப்பில் தற்போது ஜீ தொலைக்காட்சியில் புதுப்புது அர்த்தங்கள் எனும் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த சீரியலில் நடிகை தேவயானியின் மாமனார் கதாபாத்திரத்தில், பிரபல பட்டமன்ற நடுவர், திண்டுக்கல்.ஐ.லியோனி நடித்து வருகிறார்.
இந்நிலையில் திண்டுக்கல்.ஐ.லியோனி, புதுப்புது அர்த்தங்கள் சீரியல் இருந்து விலகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவருக்கு பதிலாக இந்த சீரியலில் நடிகர் ஜெயராஜ் நடிக்கிறார். இவர் ஒரு கிடாயின் கருணை மனு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
திரைப்படங்கள் மற்றும் சீரியல் நடிகரான இவர் இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.