கார்த்தி படத்தில் இருந்து விலகிய முன்னணி நடிகர்.. காரணம் இதுதானா
கார்த்தி படத்தில் இருந்து விலகிய நடிகர்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் நடிகர் கார்த்தி. இவர் நடிப்பில் தற்போது பொன்னியின் செல்வன், விருமன், சர்தார் ஆகிய படங்கள் தயாராகி வெளியாக காத்திருக்கிறது.
இதில் முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள விருமன் திரைப்படம் ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியாகிறது. இதை தொடர்ந்து பொன்னியின் செல்வன் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகிறது.
இப்படத்தை தொடர்ந்து வருகிற தீபாவளிக்கு சர்தார் திரைப்படம் திரைக்கு வரவிருக்கிறது. இந்நிலையில், அடுத்ததாக ராஜு முருகன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளார் கார்த்தி.

இப்படத்தில் வில்லனாக நடிக்க மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கமிட்டாகியிருந்ததாக ஏற்கனவே ஒரு தகவல் வெளிவந்தது. ஆனால், தற்போது இப்படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகிவிட்டாராம்.
கால்ஷீட் இல்லாத காரணத்தினால் இப்படத்தில் விஜய் சேதுபதியால் நடிக்க முடியாமல் போய்விட்டது என்று தகவல் தெரிவிக்கின்றனர்.