துளசியை தொடர்ந்து வானத்தை போல சீரியலில் இருந்து வெளியேறிய பிரபல நடிகர்- இவருமா என ரசிகர்கள் ஷாக்
சன் தொலைக்காட்சி சீரியல்களுக்கே பெயர் போன ஒரு டிவி என்று கூறலாம். காலை ஆரம்பித்து இரவு 10 மணி வரை தொடர்ந்து சீரியல்கள் ஒளிபரப்பாகும்.
ரோஜா, சந்திரலேகா, வானத்தை போல, பூவே உனக்காக இப்போது புதிதாக தொடங்கப்பட்ட கயல் என எத்தனையோ சீரியல்கள் மிகவும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றன.
சீரியல்கள் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் நேரத்தில் அதில் இருந்து முக்கிய நடிகர்கள் விலகிவிடுகிறார்கள், அப்படி இப்போது ஒரு சீரியலில் நடந்து வருகிறது.
வானத்தை போல என்ற அண்ணன்-தங்கையின் பாசத்தை உணர்த்தும் ஒரு சீரியல் ஒளிபரப்பாகிறது. இதில் தங்கையாக நடித்துவந்த ந்டிகை ஸ்வேதா அண்மையில் தொடரில் இருந்து வெளியேறினார்.
இப்போது என்ன தகவல் என்றால் அண்ணன் வேடத்தில் நடித்துவந்த சின்ராசு என்கிற தமன் சீரியலில் இருந்து வெளியேறி இருப்பதாக கூறப்படுகிறது.
இவர்கள் இருவரின் காம்பே சூப்பராக இருந்ததே, இவர்கள் இருவருமே வெளியேறுகிறார்களா என ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.