பழம்பெரும் நடிகர் தேங்காய் ஸ்ரீனிவாசனின் பேத்தியா இந்த நடிகை?- உங்கள் எத்தனை பேருக்கு தெரியும்
தேங்காய் ஸ்ரீனிவாசன்
தமிழ் சினிமாவில் 70, 80களில் கலக்கிய பிரபலங்கள் பலரை மக்கள் இப்போது நியாபகம் வைத்துள்ளார்கள். அப்படி காமெடி, எமோஷ்னல் என எல்லா விதமான கதாபாத்திரங்களிலும் பக்காவாக நடித்து மக்களை கவர்ந்தவர் தான் தேங்காய் ஸ்ரீனிவாசன்.
இவர் ஏகப்பட்ட ஹிட் படங்கள் நடித்திருந்தாலும் பாலசந்தர் 1981ம் ஆண்டு இயக்கிய தில்லுமுல்லு படம் தான் இவரது திரைப்பயணத்தில் செம ஹிட் என கூறலாம்.
இதில் தேங்காய் ஸ்ரீநிவாசன் மற்றும் சௌகார் ஜானகி இருவரும் செம ஸ்கோர் செய்திருப்பர்.
நடிகரின் பேத்தி
இவர் 1987ம் ஆண்டு நவம்பர் மாதம் உயிரிழந்துள்ளார். இவரது பேத்தியாக தமிழ் சினிமாவில் கலக்க வந்தவர் தான் நடிகை ஸ்ருதிகா.
குக் வித் கோமாளி 3 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக வலம் வரும் ஸ்ருதிகா இப்போது கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியிலும் நடுவராக இருந்து வருகிறார்.
அண்மையில் இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்த லியோனி ஸ்ருதிகாவை பார்த்து ஒரு விஷயத்திற்காக நீயெல்லாம் தேங்காய் ஸ்ரீனிவாசன் அவர்களின் பேத்தி என்று கூறி விடாதே என கூறுகிறார்.
அந்த புரொமோ வீடியோ ரசிகர்களிடம் வைரலாகிறது.
ஈரமான ரோஜாவே தொடரில் இருந்து விலகிவிட்டாரா நடிகை ப்ரியா?- வெளிவந்த தகவல்

சத்தமே இல்லாமல் நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்- பிக்பாஸ் பிரபலங்களுக்கு குவியும் வாழ்த்துகள் Manithan

லண்டனில் புலம்பெயர்ந்தோர் எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறை: பொலிஸார் முகத்தில் குத்திய போராட்டக்காரர்கள்! News Lankasri
