எனக்கு 20 உனக்கு 18 பட புகழ் நடிகர் தருணை நியாபகம் இருக்கா?- ஆளே மாறிட்டாரே, லேட்டஸ்ட் க்ளிக்
நடிகர் தருண்
தமிழ் சினிமாவில் 90களில் கலக்கிய எத்தனையோ கலைஞர்கள் இப்போதும் ஏதாவது ஒரு வகையில் கேமரா முன் வந்துவிடுகிறார்கள்.
ஆனால் ஒருசிலர் எங்கு இருக்கிறார்கள் என்பது கூட தெரியாமல் உள்ளது. அப்படி இப்போது ஒரு நடிகரின் லேட்டஸ்ட் புகைப்படம் தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் இப்படியொரு காட்சிகளில் நடிக்கிறாரா நடிகை தீபிகா படுகோன்.. கசிந்த புகைப்படம்
1990களில் வெளியான அஞ்சலி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகர் தருண். குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தவர் 2000ம் ஆண்டு முதன்முதலாக ஹீரோவாக தெலுங்கில் நடிக்க தொடங்கியுள்ளார்.
தமிழில் த்ரிஷாவுடன் இணைந்து எனக்கு 20 உனக்கு 18 படத்தில் நடித்து மக்களின் மனதில் நல்ல இடம் பிடித்தார்.
லேட்டஸ்ட் க்ளிக்
குழந்தை நட்சத்திரமாக 15 படங்களுக்கு மேலும், 25 படங்களுக்கு மேல் நாயகனாகவும் நடித்து அசத்தி வந்தவர் 2018ம் ஆண்டிற்கு பிறகு படங்கள் எதுவும் நடிக்கவில்லை.
2020ம் ஆண்டு வெளியான Anukoni Athidhi என்ற மலையாள படத்தில் நடித்த பகத் பாசிலின் கதாபாத்திரத்திற்கு தெலுங்கில் டப் பேசியிருக்கிறார்.
இந்த நிலையில் அவரது லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாக அதைப்பார்த்த ரசிகர்கள் தருணா இது ஆளே மாறிவிட்டாரே என கமெண்ட் செய்து வருகிறார்கள்.