30 ஆண்டுகள் கழித்து மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கும் பிரபல வில்லன் நடிகர் - யாருனு தெரியுமா
மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் படம் பொன்னியின் செல்வன்.
இப்படத்தில் விக்ரம், கார்த்தி, அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பிரபு, பாலாஜி சக்திவேல் என திரையுலக பட்டாளமே நடிக்கின்றனர்.
இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்தை இரண்டு பாகங்களாக எடுக்கின்றனர். முதல் பாகம் அடுத்தாண்டு வெளியிடப்பட உள்ளது.
மேலும் தற்போது பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இப்படத்தில் பிரபல மலையாள வில்லன் நடிகர் பாபு ஆண்டனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
கடந்த 1990 ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான அஞ்சலி படத்தில் வில்லனாக நடித்திருந்த பாபு ஆண்டனி, தற்போது சுமார் 30 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அவர் இயக்கத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.