இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் ராம் பொதினேனி நடிக்கும் RAPO19 படத்தில் இணைகிறார் நடிகர் ஆதி பினிஷெட்டி !

lingusamy adhi Ram Pothineni keerthy shetty
By Kathick Jul 20, 2021 08:05 AM GMT
Report

தெலுங்கு திரை உலகின் முன்னணி நாயகன் உஸ்தாத் ராம் பொதினேனி நடிப்பில், முழுக்க முழுக்க, ஸ்டைலிஷ், ஆக்சன், கமர்ஷியல் படமாக உருவாகும் படம் பெயரிடபடாத இப்படத்திற்கு RAPO19 என்றழைக்கப்படுகிறது. இப்படத்தினை முன்னணி இயக்குநர் என்.லிங்குசாமி இயக்குகிறார்.

‘RAPO19’ படத்தின் படப்பிடிப்பு ஜூலை 12 ல் துவங்கி ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. பிரமாண்ட கூட்டணியில் உருவாகும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஏற்கனவே உச்சத்தில் உள்ள நிலையில், படத்தயாரிப்பாளர்கள் தற்போது இப்படத்தில், நாயகன் ராம் பொதினேனிக்கு எதிர் நாயகனாக நடிகர் ஆதி பின்ஷெட்டியை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

நடிகர் ஆதி நாயகனாக நடித்து, இரு படங்கள் தமிழிலும் மேலும் இரு படங்கள் தெலுங்கிலும் வெளியாக தயாராக இருக்கின்றன. தற்போது பன்மொழிகளில் உருவாகும் ஒரு படத்திலும் அவர் நாயகனாக நடித்து வருகிறார். நடிகர் ஆதி, ஒரே மாதிரி பாத்திரங்களில் நடிப்பதில் தனக்கு விருப்பமில்லை என்று கூறியுள்ளார்.

அவர் தேர்ந்தெடுத்து நடித்து வரும் படங்களே அதற்கு சாட்சியாக இருக்கின்றன. மாஸ் கமர்ஷியலாக, ராம் பொதினேனி நடிக்கும் ‘RAPO19’ படத்தில், எதிர் நாயகன் பாத்திரத்தில் அவர் நடிக்க ஒப்புக்கொண்ட காரணமே, அப்பாத்திரம் வழக்கமானதிலிருந்து மாறுப்பட்ட பாத்திரமாகவும், சவால்மிக்கதாகவும், தனித்துவம் கொண்டதாகவும் இருந்தது தான்.

இம்மாதிரி வித்தியாசமான பாத்திரங்கள் துணை பாத்திரங்களாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொண்டு செய்து வருபவர் ஆதி. இப்பாத்திரமும் அவருக்கு பெரிய பெயர் பெற்றுத் தரும் பாத்திரமாக இருக்கும். முதல்முறையாக வில்லனாக நடிக்கிறார் ராம் மற்றும் ஆதிக்கு இடையிலான காட்சிகள் படத்தில் அனல் பறக்கும் பரபரப்போடு மாஸாக இருக்கும். இந்த இரு திறமையான நடிகர்களும் திரையில் இணைந்து நடிப்பதில், பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.

RAPO19 படத்தில் Uppena படப்புகழ் நடிகை கீர்த்தி ஷெட்டி நாயகியாக நடிக்கிறார். தயாரிப்பாளர் ஶ்ரீனிவாசா சித்தூரி Srinivasaa Silver Screen நிறுவனத்தின் சார்பில் இப்படத்தை பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கிறார். பவன் குமார் இப்படத்தினை வழங்குகிறார். இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US