மாநாடு படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்த நட்சத்திரங்கள்.. யார்யார் தெரியுமா
மாநாடு
வெங்கட் பிரபு இயக்கத்தில் வித்தியசமான கதைக்களம் தமிழ் சினிமாவில் வெளிவந்த திரைப்படம் மாநாடு. இப்படத்தில் சிம்பு ஹீரோவாகி நடித்திருந்தார்.
மேலும் நடிப்பு அரக்கன் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் எஸ்.ஜே. சூர்யா வில்லனாக நடித்து நம் அனைவரையும் அசர வைத்தார். இப்படம் எதிர்பார்த்ததை விட மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.
இப்படத்திற்கு பின் தொடர்ந்து பல படங்களில் வில்லனாக பட்டையை கிளப்பி வருகிறார் எஸ்.ஜே. சூர்யா. ஆனால், இந்த கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது நடிகர் எஸ். ஜே. சூர்யா கிடையாதாம். அதற்கு பெரிய லிஸ்ட்டே இருக்கிறது.
மிஸ் செய்த நடிகர்கள்
முதலில் இந்த கதையில் நடிகர் பசுபதியை தான் நடிக்க வைக்க முடிவு செய்துள்ளனர். ஆனால், கதை சற்று மாறியவுடன் அர்ஜுனை நடிக்க வைக்க திட்டமிட்டு, அவரிடம் கால்ஷீட் கேட்டுள்ளனர். ஆனால், முஸ்லிம் பிரச்சனை இருப்பதால் நான் பண்ணவில்லை என அர்ஜுன் கூறிவிட்டாராம்.
தொடர்ந்து அரவிந்த் சாமி, ரவி தேஜா, கிச்சா சுதீப் என பல நடிகர்களிடம் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க கேட்டுள்ளனர். ஆனால், யாரிடமும் அப்போது கால்ஷீட் இல்லை என்பதால் இறுதியாக எஸ்.ஜே. சூர்யாவிடம் இந்த ரோல் வந்து சேர்ந்துள்ளது என சொல்லப்படுகிறது.